நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டவர் பலி!

திருகோணமலை - நிலாவெளி கடற்கரையில் நீராடி கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். தனது மனைவியுடன் குறித்த நபர் நேற்று கடற்கரையில் நீராட சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 71 வயதான இத்தாலி நாட்டைச்  சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

No comments