கூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம்! - ஆனந்தசங்கரி அதிரடி
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வரை கட்சியில் இருந்து நீக்க உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழரசுக் கட்சி உள்ளடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். இந்நிலையில், தமிழரசு கட்சிக்கு வாக்களித்தமையால் அவர்கள் நீக்கப்படவுள்ளனர். கட்சியின் கோட்பாடுகளை அறிந்தும் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது. குறித்த உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
கட்சியைச் சார்ந்த அனைத்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் ஏனைய உள்ளூராட்சி மன்ற தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுகளில் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க கூடாது. அதனையும், மீறினால் அவர்கள் மீதும் இவ்வாறான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படும் என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Post a Comment