காணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13,200 விண்ணப்பங்கள்

காணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

குறித்த விண்ணப்பங்கள் காணாமல்போனோர் தொடர்பான பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சூரியனின் செய்திச் சேவை வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments