யாழ்ப்பாணத்தில் முன்னேற்றமாம்: இன்றும் மீட்கப்பட்ட கஞ்சா!

கடத்தல்காரர்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் கஞ்சா மீட்கப்படுவது தொடர்கின்ற நிலையில் இன்றும் காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த நிலையில், 80  கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்படி 39 பொதிகள்  இன்று (19) அதிகாலையில்கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் எந்தவொரு சந்தேகநபரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே  வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில், அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்பட்டால், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

அதேநேரம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரம், விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காவல் நிலையப் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள், மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த, தகவல் அறிந்த பொது மக்கள் தொலைபேசி மூலமும், வடமாகாண பிரதி காவல்துறை அதிபருக்கு, இரகசியமாக தகவல்களை வழங்கினால், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த இலகுவாக இருக்குமென்று, அவர் தெரிவித்துள்ளார்.

No comments