ரணிலை சந்தித்த தமிழரசு!

வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பண்ணைகள் மற்றும் முன் பள்ளிகளை படையினரிடமிருந்து மீட்க ரணில் சம்மதம் தெரிவித்துள்ளாராம். அவற்றினை உரிய திணைக்களங்களிடம் கையளிப்பதற்கு பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரணிலை சந்தித்த தமிழரசுக்கட்சியினர் நடத்திய சந்திப்பில் வலி. வடக்கில் பலாலி விமான நிலையத்;திற்கு தேவையான குறைந்த பட்ச நிலத்தினை தவிர்த்து ஏனைய நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் வருகை தந்து பதிலளிக்க ரணில் கால அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விமான நிலையத்திற்கோ அல்லது படைகளின் கட்டாய தேவைகளோ அன்றிக் கானப்படும் பலாலி வீதிக்கு கிழக்காக உள்ள 647 ஏக்கர் நிலம் அதேபோன்று கட்டுவன் மயிலிட்டிக்கு தெற்கே உள்ள குரும்பசிட்டி உள்ளிட்ட பெரும்பகுதிகளையும் பலாலி பிரதான வீதியினையும் விடுவிக்குமாறு மாவை கோரியிருந்த நிலையிலேயே எதிர் வரும் 10ம் திகதி யாழ். வரும் பிரதமர் யாழில் விசேடமாக ஆராய்ந்த பின்பு பதிலளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் அரச தரப்பில் ரணிலும்,ரவூப் ஹக்கீம் , ரிசாட் பதீயுதீன் , டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் தமிழரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா , சுமந்திரன் , சிறிதரன் ஆகியோருடன் யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் ஆகியோரும் பங்கெடுத்ததாக தெரியவருகின்றது.

தமிழரசுக்கட்சி தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள கடும் எதிர்ப்பலைகளின் மத்தியில் ரணிலுடன் இச்சந்திப்பு நடைபெற்றிருந்தது.எனினும் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்றுவது தொடர்பில் நிச்சயமற்ற நிலையே காணப்படுகின்றது.

No comments