மீண்டும் மேடைக்கு வருகின்றது நெல்சிப் ஊழல்!

வடமாகாணசபையில் நடைபெற்றதாக கூறப்படும் பாரிய அதிகார மட்ட ஊழலான நெல்சிப் ஊழல் தொடர்பில் ஆராய வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணசபையின் அதிகார மட்ட பாரிய ஊழலென அடையாளம் காணப்பட்ட நெல்சிப் ஊழல் தொடர்பில் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதன் விசாரணை அறிக்கை கடந்த ஆண்டின் ஜீலை மாதம் கையளிக்கப்பட்டிருந்தது.எனினும் ஒருவருடத்தை அண்மிக்கின்ற போதும் குறித்த அறிக்கைக்கு என்ன நடந்ததென்பது தொடர்பில் தகவல்கள் இல்லாதுள்ளது.

இந்நிலையில் வடமாகாணசபையின் கடைசி அமர்வில் இவ்விவகாரம் ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் அவைத்தலைவரது பாரியரது மறைவினால் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.


இந்நிலையில் தற்போது குறித்த நெல்சிப் ஊழல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஆளுநர் முற்பட்டுள்ளார்.

இதனிடையே குறித்த நெல்சிப் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருந்த முன்னாள் உள்ளுராட்சி ஆணையாளர் ஜெகூ புலமைப்பரிசில் பெற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.அவருக்கு எதிராக ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை நீதிமன்றின் விமர்சனங்களிற்கு உள்ளாகியிருந்தது.


இந்நிலையில் குறித்த ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலர் தொடர்ந்தும் சேவையிலிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி பகிரங்க குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளார். 

No comments