இராணுவத்தினரிடம் சமூக ஊடகக் கணக்கு விபரங்களைக் வழங்குமாறு சிறீலங்கா இராணுவம் உத்தரவு

அலைபேசி இலக்கங்கள், முகநூல் கணக்கு, வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பு கணக்கு விபரங்களை உடனடியாக இராணுவத் தலைமையகத்துக்கு வழங்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இராணுவத்தில் கடமையாற்றி வரும் சுமார் இரண்டு இலட்சம் அதிகாரிகள் மற்றும் படை சிப்பாய்களின் அலைபேசி மற்றும் இணைய கணக்கு விபரங்களை வழங்குமாறு இராணுவத் தலைமையகம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனைத்து இராணுவத்தினரும், தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை இராணுவ தலைமையகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்பதோடு அதன் பின்னர் இராணுவத்திற்கு அறிவிக்காமல் வேறும் அலைபேசி இலக்கங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments