மலேசியாவில் 61 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுகட்டினர் மக்கள்! பிரதமராக மஹதிர் முஹம்மத் தொிவு

மலேசியா பிரதமர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த, 92 வயதான மஹதிர் முஹம்மத் அபார வெற்றிப் பெற்றுள்ளார்.

மலேசியா பிரதமர் தேர்தலில், ஆளும் கட்சியின் வேட்பாளரான நஜீப் ரசாக்கை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் களமிறங்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹதிர் முஹம்மத் வீழ்த்தியுள்ளார்.

சுமார், 222 தொகுதிகள் கொண்ட மலேசியா பாராளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், 112 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், மஹதிர் முஹம்மத் அதைவிட அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், 61 ஆண்டுகளாக மலேசியாவை ஆட்சி செய்துவந்த தேசிய கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்த வெற்றியை மலேசிய மக்கள் மலேசிய சுனாமி என்றும் அழைத்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றியின் மூலம் 92 வயதான மஹதிர் முஹம்மத் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

No comments