வடக்கு முதலமைச்சர் விவகாரம்: டெலோ, புளொட் முறுகல்!


வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு ஆதவளிப்பது தொடர்பில் கூட்டமைப்பில் எஞ்சியுள்ள கட்சிகளான டெலோ மற்றும் புளொட் அமைப்புக்களிடையே பிளவு தோன்றியுள்ளது.

அடுத்த மாகாண சபைத் தேர்தலை எதிர் கொள்வதற்காக புதிய கட்சியினை அமைக்க விரும்பினால் முதலமைச்சர் அமைக்கலாம். அந்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பாதிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன அடுத்த வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் இத்தகைய கருத்தை வெளியிட்ட போதும்  எம்.கே.சிவாஜிலிங்கம் மௌனம் காத்துவருகின்றார்.

வடமாகாண சபை முதலமைச்சராகவுள்ள க.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க முடியும். அது தொடர்பில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை. தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் சிறீகாந்தா ஒரு வெற்று துப்பாக்கி. ரவைகள் இல்லை. அவர் போராட்ட காலத்திலும் வெற்றுதுப்பாக்கி தான் என தெரிவித்துள்ள முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் இறுதி முடிவை செல்வம் மட்டுமே எடுப்பார் என தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சர்கள் நியமனத்தின் போது தான் சொன்ன விந்தன் கனரட்ணத்திற்கு அமைச்சு பதவி கொடுக்காத சீற்றத்திலேயே சிறீகாந்தா கருத்து வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

No comments