Header Shelvazug

http://shelvazug.com/

வரும் உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசில் அணியை நெய்மர் வழிநடத்துவார்!!

ரஷ்யாவில் ஜூன் மாதம் தொடங்கும் உலகக்கோப்பையில் பிரேசில் அணியை பிரேசில் கால்பந்து அணி நட்சத்திர வீரர் நெய்மர்தலைமையில்தான் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரான்ஸ் அணியின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்த நெய்மருக்கு கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் நெய்மர் முழுவதுமாக குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரேசில் அணியை நெய்மர் வழி நடத்துவார் என்று பீலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.