Header Shelvazug

http://shelvazug.com/

அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் - முன்னாள் உளவு அமைப்பின் தலைவர்

அமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் காமே குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப், தனது கீச்சகப் பக்கத்தில் முன்னாள் எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் காமேவை கடுமையாக வசைமாரி பொழிந்திருந்தார்.

இதுதொடர்பாக, அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜேம்ஸ் காமே:-

‘டிரம்ப் மருத்துவ ரீதியாக இந்நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் தகுதி உடையவர்தானா? அல்லது, அவர் ஞாபகமறதி நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறாரா? என்னும் சர்ச்சைக்குள் போக நான் விரும்பவில்லை.

அவர் அமெரிக்காவின் அதிபராக பதவி வகிக்க மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என நான் கருதவில்லை. ஆனால், தார்மீக ரீதியாக நமது நாட்டின் அதிபராக பதவி வகிக்க அவருக்கு தகுதி இல்லை.

நமது நாட்டின் மரியாதை மற்றும் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அதிபர் மதிப்பளிக்க வேண்டும். மிக முக்கியமாக உண்மையானவராக இருக்க வேண்டும். டிரம்ப்பால் இதை எல்லாம் கடைபிடிக்க இயலாது’ என குறிப்பிட்டுள்ளார்.

No comments