வலிகாமம் வடக்கு காணிகள் சுவீகரிக்கப்படுகின்றனவா?



யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளுக்குள் விலைமதிப்பீட்டு அதிகாரிகள் நேற்று புதன்கிழமை சென்றிருப்பது தமிழ் மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்க திட்டமிடப்படுகிறதாவென சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் விலை மதிப்பீட்டு அதிகாரிகள் வலி வடக்கில் விடுவிக்கப்படாத இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் சென்று பார்வையிட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வர முன் மக்களின் காணி மக்களுக்கு என கூறி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்கள் கடக்கின்ற நிலையில் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளது.

சுமார் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் பாதுகாப்பு படைகளிடம் உள்ள நிலையில் அண்மையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான காணியை மட்டும் விடுவித்ததுள்ளார்கள்.

இந்நிலையில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கின்ற தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டமை காணிகளை இராணுவம் சுவீகரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது.

விலை மதிப்பீட்டு அதிகாரிகள் காணிகளை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக விலைமதிப்பீட்டினை மேற்கொள்வதற்கவே வந்திருக்கிறார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயக்காணிகளை இலங்கை நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் நில அளவை செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments