வவுனியா:வர்த்தக சங்க தலைவர் தாக்கப்பட்டார்!
வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது இன்று மாலை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் நபரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரில் டெங்கு நோய் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பிரிவு, வவுனியா மாநகரசபை மற்றும் வர்த்தகர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பார்வையிடப்பட்டன. அது தொடர்பான முரன்பாடு ஒன்றைத் தொடர்ந்து, தன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த சங்கத் தலைவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Post a Comment