யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தும் , யாழ்.நோக்கி வந்த பேருந்தும் ரம்பாவேயில் விபத்து.
யாழ்ப்பாணம் - அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில் , பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் , அக்கரைப்பற்றில் இருந்து , யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்துகள் விபத்துக்குள்ளான போது , அந்த பேருந்தின் பின்னால் , வந்த தனியார் பேருந்தும் இவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்துமே மோதி விபத்துக்குள்ளியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம், ரம்பேவ மற்றும் மதவாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Post a Comment