பூநகரியில் பொலிஸாரைக் கண்டதும் கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருட்களை வீதியில் வீசியெறிந்து தப்பிய நபர்கள்!
பூநகரி பகுதியில் பொலிசாரை கண்டதும் கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருட்களை வீதியில் வீசி விட்டு சென்ற நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் , பூநகரி பாடசாலைக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு போலீசார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
அதன் போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் வழி மறித்த போது , மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் , மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தப்பியோடியுள்ளனர்.
அவர்களை பொலிஸார் துரத்திய வேளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பொதிகளை வீதியில் வீசி விட்டு தப்பித்துள்ளனர்
வீதியில் வீசப்பட்ட பொதியை பொலிஸார் சோதனையிட்ட வேளை அதனுள் 13 கிலோ 340 கிராம் ஹீரோயின் போதைப்பொருளும், ஒரு கிலோ 62 கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.
அதனை மீட்டுள்ள பொலிஸார் , தப்பி சென்ற நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment