யாழில் மாணவர்களிடையே போதைப்பொருள்?



யாழில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அழைப்புவிடுத்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பில் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் 163 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகி உள்ள நிலையில் 133 பேரை அதிகாரிகள் மீள இணைத்துள்ளார்கள்.

30 மாணவர்கள் கைவிடப்பட்ட நிலையில் அவர்களை எவ்வாறு மீள இணைப்பது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். 

அதேவேளை யாழ் மாவட்டத்தில் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 193 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளது.

எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கும் போதைப் பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆகவே அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக பயணிப்பதன் மூலம் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.


No comments