வடக்கு ஆளுநருக்கெதிராக முறைப்பாடு!
வடக்கு மாகாண ஆளுநர்;, யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராகப் பதவி வகித்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இன்று வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களில் அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் ரூபா அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தமது முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் 15 பக்கங்களைக் கொண்ட கணக்காய்வு அறிக்கையின் உண்மைப் பிரதியும் முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment