பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும்  இது அவ்வைத்தியசாலையின் எலும்பியல் சத்திரசிகிச்சை சேவையின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது என்றும் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மருத்துவ நிபுணர் விமலராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இவ் வெற்றிகரமான சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

இச்சத்திரசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த சத்திரசிகிச்சைக் குழுவினர் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் வைத்தியசாலை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

மேலும், வைத்தியசாலையின் மருத்துவச் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கிவரும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆகியோருக்கு வைத்தியசாலை தரப்பில் இருந்து சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments