ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய நகரத்தை அரிதான சூறாவளி தாக்கியது


ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் உள்ள உல்லாடுல்லா நகரை, அக்டோபர் 3 ஆம் திகதி ஒரு அரிதான சூறாவளி தாக்கியதை, அங்கு வசித்த பலர் படம்பிடித்தனர்.

இந்த நிகழ்வானது கடுமையான இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்டது. இவ்வளவு மக்கள் அடர்த்தியுள்ள இடத்தில் இதைக் காண்பது மிகவும் அசாதாரணமானது என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிகழ்வால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதுடன், சில மரங்களும் சாய்ந்தன என்று அது மேலும் தெரிவித்தது.

No comments