"நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்" – பொலிஸ் விசாரணைக்குப் பின் கஜேந்திரன்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின் சிலை வைத்தமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் மூன்று மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கஜேந்திரன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அழைக்கப்பட்டு , விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு மூலங்களை பெற்றுள்னர்
தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டமை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் எனவும் , நினைவேந்தும் உரிமைகளை மறுக்கும் செயலாகவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணைகளின் பின்னர் கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

Post a Comment