செய்வினை வேலை செய்யவில்லையாம்?



தேரர்களின் செய்வினையினையடுத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை இலங்கை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இச்செய்திகள் பொய்யானவை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இத்தகைய வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை உத்தியோகபூர்வ மூலங்கள் ஊடாகச் சரிபார்க்காமல், சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே திருகோணமலை கன்சைட்  கடற்படை சித்திவதை கூட முன்னள் கடற்படை தளபதி விகாரமாதேவியில் அமர்ந்திருக்கும் பிக்குகள் குழுவை சந்தித்துள்ளார்.

No comments