குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்
குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது
வல்வெட்டித்துறை தீருவில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , பொது சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உயிர்நீத்த 12 மாவீரர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய அமைதி படையினர் நிலை கொண்டிருந்த கால பகுதியில் பருத்தித்துறை கடல் பகுதியில் படகில் பயணித்துக்கொண்டிருந்த குமரப்பா , புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து , காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்த்து கொழும்புக்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி 12 பேரும் "சயனைட்"உட்கொண்டு மரணித்தனர்.




Post a Comment