வலி. வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு!
"சுத்தமான சுற்றுச்சூழல்... நலமான எதிர்காலம்..." எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விதையனைத்தும் விருட்சமே அமைப்பும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையும் இணைந்து இந்த விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணியை முன்னெடுத்திருந்தன.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளைத் தடுத்து, பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மல்லாகம் சந்தியில் ஆரம்பமான விழிப்புணர்வு மற்றும் துப்புரவுப் பணி, கே.கே.எஸ். வீதியூடாகச் சென்று தெள்ளிப்பழைச் சந்தியை அடைந்து, தெள்ளிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகம் வரை தொடர்ந்தது.
இந்த வேலைத்திட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

Post a Comment