தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது
தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்கிறது.




Post a Comment