திருகோணமலையில் திலீபனின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (15) திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால்  இடம்பெற்றது.

39 ஆவது நினைவு தினமாக இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டு அவரது நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், காணாமல் போன உறவுகளின் சங்கங்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments