திருகோணமலை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு


கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று( 4ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா தொடருந்து நிலையத்திற்கும் திருகோணமலை தொடருந்து நிலையத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவராவர். இது விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments