மியாமியில் அமேசான் சரக்கு விமான விபத்தில் பலர் உயிரிழந்தனர்
அமெரிக்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மியாமி சர்வதேச விமான நிலையத்தில், அமேசான் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்ததில், குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்த விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் (ஜிஎம்டி 18:00) ஓடுபாதையைத் தாண்டிச் சென்றது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர், மூவர் படுகாயமடைந்தனர், மேலும் இருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மியாமி-டேட் மாவட்ட அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

Post a Comment