இந்தோனேசியாவின் பப்புவா சந்தையில் ஏற்பட்ட தீ!! 40 கடைகள் நாசம்! 11 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் கிழக்கு எல்லையில் உள்ள பப்புவா பிராந்தியத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சந்தை ஒன்று முற்றிலுமாக எரிந்து நாசமானதுடன், ஆறு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய பப்புவா மாகாணத்தின் பனியாய் நகரில் நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் தீ முதலில் கண்டறியப்பட்டதாகவும், அது விரைவாகப் பல கடைவீடுகளுக்குப் பரவியதாகவும் உள்ளூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹென்றி ஜே. மனுருங் தெரிவித்தார்.
ஆய்வின் போது, தீக்காயங்களுடன் உயிரிழந்த 11 பேரை அதிகாரிகள் கண்டறிந்தனர். உயிரிழந்த 11 பேரில், ஐந்து பேர் பெரியவர்கள், மற்ற ஆறு பேர் குழந்தைகள், என்று ஹென்றி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தைகளின் வயது இரண்டு முதல் ஒன்பது வயதிற்கு இடைப்பட்டதாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர்த்தாரைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எரிந்த தீ, குறைந்தது 40 சிறு கடைகளையும் வீடுகளையும் அழித்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.
தீயின் தீவிரம் மற்றும் வீடுகளும் கடைகளும் மிகவும் நெருக்கமாக அமைந்திருந்ததால், தீயணைப்புப் பணிக்குக் கணிசமான நேரம் பிடித்தது என்று ஹென்றி கூறினார்.

Post a Comment