வெடுக்குநாரி: சிவன் மேலே-புத்தர் கீழே!



நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

நேற்று புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாரி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து ஆதி சிவனுக்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். 

இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர் ஆதி சிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முயன்றமை அப்பகுதியில் பதட்ட நிலையை தோற்றுவித்தது.

சம்பவ இடத்தில் பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்ட நிலையிலும் பொதுமக்களினால் குறித்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

 எனினும் பிக்குகளால் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையை எதிர்ப்பின் காரணமாக மலைக்கு கீழே வைத்த பிக்கு தலைமையிலான குழுவினர் அதற்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். 


No comments