இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கே சிலையை அகற்றினார்களாம்
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ வூட்லர் தெரிவித்துள்ளார்
நல்லூர் பகுதியில் தியாக தீபத்தின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவ சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது
அது தொடர்பில் ஊடக பேச்சாளர் தெரிவிக்கையில்,
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே உருவச்சிலை அகற்றப்பட்டது.
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில், ‘எல்லான் படை’ என்ற குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Post a Comment