நாமலிற்கு பிணையில்லை!
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான விமானக் கொள்வனவு தொடர்பான பரிவர்த்தனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.
விசாரணைக்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்சவிடம் சுமார் ஐந்து மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, செப்டம்பர் 4ஆம் திகதியான இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக செப்டம்பர் 3ஆம் திகதி ஆஜராக முடியுமா என அவர் கோரியிருந்ததாகவும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு செப்டம்பர் 4ஆம் திகதியே ஆஜராகுமாறு ஆணைக்குழு அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
100 மில்லியன் இலஞ்சத்தை நாமல் ராஜபக்ச பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட விசாரணையிலேயே நாமல் ராஜபக்ச கைதாகியுள்ளார்.

Post a Comment