சிறீதர் தியேட்டரினுள நீதி கேட்கப்போனவர்கள் கைது!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமை அலுவலகமான சிறீதியேட்டரினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக ஈபிடிபி கட்சி தலைமை அறிவித்துள்ளது.
எனினும் முச்சக்கரவண்டி சாரதியொருவரை தாக்கிய ஈபிடிபியினரை முச்சக்கரவண்டியின் சாரதிகள் திரண்டுவந்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில்; முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில், அலுவலகத்தின் வரவேற்பு பகுதியினுள் நுழைந்த இருவர், அடாவடியில் ஈடுபட்டதுடன் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்ட நிலையிலேயே சம்மந்தப்பட்டவர்கள் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இன்று மாலை அலுவலகத்திற்கு வருகைதந்த பிரதான சந்தேகநபரின் தாய் மற்றும் மைத்துனர் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் சந்தேகநபர்களை வழக்கில் இருந்து விடுவிக்க உதவுமாறும் லேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி கட்சி உறுப்பினர் ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியொருவரை தாக்கிய பின்னர் கட்சி அலுவலகத்தினுள் பதுங்கியிருந்த நிலையில் திரண்டு வந்த முச்சக்கரவண்டி சாரதியின் நண்பர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

Post a Comment