டக்ளஸிற்கு நற்பெயர் இருக்கிறதாம்!
அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றிடமிருந்து 100 மில்லியன் நஸ்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டும், நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நட்டஈடாக ரூ.100 மில்லியன் வழங்க வேண்டும் எனவும் சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரது வீட்டில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தீவகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்திய ஆசாத் மௌலானா என்பவரை பிள்ளையானிற்கு டக்ளஸ் தேவானந்தவே அறிமுகப்படுத்தியதான குற்றச்சாட்டில் விசாரணைகள் இடம்பெற்றதாக தற்போது ஈபிடிபி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment