கோத்தாவை தொடர்ந்து டக்ளஸிற்கும் மறதி வருத்தம்!
ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சாட்சியமாகியுள்ள அசாத் மௌலானாவிற்கு இலங்கை மரமுந்திரை கூட்டுத்தாபனத்தில் வேலை பெற்றுக்கொடுத்தமை தனக்கு நினைவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிட்ட அசாத் மௌலானாவின் தந்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிருந்தவர்.தமிழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினில் அவர் உயிரிழந்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒருவரின் மகன் என்ற ரீதியில், அசாத் மௌலானாவிற்கு மரமுந்திரை கூட்டுத்தாபனத்தில் வேலை பெற்றுக்கொடுத்திருப்பேன் என குறிப்பிட்ட அவர் அது தொடர்பில் தனக்கு நினைவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தன் மீது சேறுபூசியதாக சமூக ஊடக வழியாக டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றிடம் 100 மில்லியன் இழப்பீடு கோரியதாக செய்திகளை பரப்பிவருகின்றார்.எனினும் அவ்வாறான நட்ட ஈடு கோரும் கடிதங்கள் கிடைத்திருக்கவில்லையென நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அசாத் மௌலானவை பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்தினேனா அல்லது பிள்ளையான் எனக்கு அறிமுகப்படுத்தினாரா என்பது விசாரணையில் தெரியவரும். அசாத் மௌலானாவை பிள்ளையான் தான் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் கருணா பிளவின் பின்னராக இலங்கை இராணுவ புலனாய்வு கட்டமைப்புடன் சேர்ந்தியங்கிய காலப்பகுதியில் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளிற்காக அசாத் மௌலானாவை பிள்ளையானிற்கு அறிமுகப்படுத்தியிருந்ததாக டக்ளஸ் தேவானந்தா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment