வவுனியாபல்கலைக்கழகத்திற்கு காட்டுத்தீ பரவாமல் கட்டுப்படுத்திய விமானப்படை!
வவுனியாவின் புரசம்குளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வெற்றிகரமாகக் சிறீலங்கா விமானப்படை கட்டுக்குள் கொண்டுவந்தது. தீயானது அருகிலுள்ள வனக் காப்பகத்திற்கும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.தீ வேகமாகப் பரவத் தொடங்கியதை அடுத்து, புரசம்குளம் காவல் நிலையத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, காவல்துறையின் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு அதிகாரி மற்றும் நான்கு தீயணைப்பு வீரர்களைக் கொண்ட வவுனியா இலங்கை விமானப்படை தளத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதியை அடைந்த குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என இலங்கை விமானப்படை தெரிவித்தது.
இந்த தீ பரவில் நேற்றுப் புதன்கிழமை 19 அன்று அருகிலுள்ள வனக் காப்பகம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்திற்கு ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைக்க, விரைவான தீ பரவிய இடத்தில் உதவியதாக இலங்கை ஆயுதப் படைகள் தெரிவித்தன.



Post a Comment