தென் கொரியா வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக 16 பேர் உயிரிழப்பு

 

வரலாறு காணாத வெப்ப அலை தென் கொரியாவைத் தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் . தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடிஏற்படுவதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்குமாறு அதிபர் லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளார் .

இந்த ஆண்டு மே 15 முதல் ஆகஸ்ட் 2 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 2,025 பேர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலைநகரில் நண்பகலில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டியதுடன், இரவு நேரத்தில் சுமார் 29 டிகிரியாக மட்டுமே குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், அதிக அளவில் தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், நகரம் சுமார் 4,000 பொது இடங்களைக் குளிரூட்டும் மையங்களாக நியமித்துள்ளது.

சியோலின் மக்கள்தொகை 96 லட்சம் என்றாலும், அதன் பரந்த பெருநகரப் பகுதியில் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், இது நாட்டின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியாகும். 

No comments