தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதியினர் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தனர்


கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுமணத் தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகியோர் தங்களது தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனியார் உலங்கு வானூர்தி தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் மற்றும் அவர்களது கிரேக்க நாட்டவரான விமானியும் உயிரிழந்தனர்.

அந்தத் தம்பதியினர், ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து பிரபலமான விடுமுறைத் தீவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகக் கூறப்படுகிறது.

கிரீஸின் விமானப் பாதுகாப்பு ஆணையம், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைச் சேகரிக்கவும் சாட்சிகளிடம் பேசவும் செவ்வாயன்று சம்பவ இடத்திற்குச் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments