ஈஸ்டர் தாக்குதல்: வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளிப்பு!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு குறித்து, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் இன்று (24) நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். வவுனதீவு

இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து பெறப்பட்ட புலனாய்வு அறிக்கைகள் மற்றும் அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த நபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம் என குற்றப் புலனாய்வுத் துறை அறிவித்ததைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் அளிக்கப்பட்ட அந்த வாக்குமூலம் முத்திரையிடப்பட்டு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

No comments