வாளைச்சேனைப் பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வடமுனை கங்கை பகுதியில் மண் அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரமே நேற்று (10) திங்கட்கிழமை இரவு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment