எரிக் மேயர் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராகப் பதவியேற்றார்


அமெரிக்க வெளியுறவுத் துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லண்டாவ் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எரிக் மேயர் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

தொழில்முறை மூத்த வெளிநாட்டு சேவை அதிகாரியான இவர், இதற்கு முன்னர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த பணியக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை ஆழப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ள இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், இந்த நியமனத்தை வரவேற்றுள்ளது.

No comments