நேபாளத்தின் உயிரிழப்பு 177 ஆக உயர்ந்துள்ளது!!

நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து , 177க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 529 சுற்றுலாப் பயணிகள் உட்பட 826 பேரைக் காணவில்லை எனவும் அறிவிக்க்பபட்டது.
காணாமல் போன சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் , அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேர், மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அடங்குவர்.
நேற்றைய வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 177 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை தனது சமீபத்திய தகவலில் தெரிவித்துள்ளது.
33 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இதுவரை 3,318 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது.
திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது . இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர். மேலும், மூன்று பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள ஒரு எல்லைக் கடக்கும் இடத்தில், நீர் மற்றும் சேற்றுப் பேரலை கட்டிடங்களைத் தாக்குவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Post a Comment