செம்மணி இன்றும் 06 சோதனைக்குழிகள் அகழ்வு - அவற்றில் மூன்றில் என்புக்கூடுகள்
செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டன.
முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 106 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 52ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை புதைகுழிக்கு அருகில் எழுமாறாக தோண்டப்பட்ட இரு சோதனைக்குழிகளில் இருந்தும் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதைகுழியை தவிர மேலும் 06 சோதனைகுழிகள் அகழப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று குழிக்குள் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
ஏற்கனவே அகழப்பட்ட இரண்டு சோதனை குழிகளை தவிர மேலும் 12சோதனை குழிகள் அகழ தீர்மானிக்கப்பட்ட நிலையில் தற்போது 06 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், ஏனைய 06 குழிகள் அடுத்து வரும் நாட்களில் அகழப்படவுள்ளது.
என்புகளை ஆய்வு செய்வதாற்கான நிதி ஒதுக்கப்பட்டு, அவை நிலுவையில் உள்ளது. மேலும் நிதிகளை விடுவிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்நிலையில், மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான பாதீட்டினை சமர்ப்பிக்க நீதிமன்று அறிவுறுத்தியுள்ள நிலையில், ஒக்டோபர் மாதம் மன்று கூடும் போது பாதீடு சமர்ப்பிக்கப்பட்டதும், அரசாங்கம் நிதியை விடுவிக்கும், என எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு நிதிவிடுவிக்கப்பட்டால் அடுத்த கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்

Post a Comment