யாழில். நீதி அமைச்சர் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வு
'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , (International Day of the Victims of Enforced Disappearances) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றன.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குறித்த நிகழ்வு இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ச பவானந்தராசா மற்றும் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஒரு அங்கமாக பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும் கொம்பனித்தெரு ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
அதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும் , கண்காட்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment