நீதிபதிகளிற்கு ஆயட்காலம் கூடுகின்றது!
பலதரப்புக்களினதும் கடுமையான எதிர்ப்புக்கள் மத்தியில் இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்தில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றப்பட்டுள்ளது. அதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் (தலைமை நீதிபதி) 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் அதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் ஓய்வுபெற வேண்டுமெனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பல சட்டத்தரணிகள் அமைப்புக்களும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை திருத்துவதற்கு தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்திருந்தன.
இந்நிலையில் நாடாளுமன்றில் தனக்குள்ள பெரும்பான்மையினை பயன்படுத்தி அனுர அரசு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்துள்ளது.

Post a Comment