கண் கட்டு வித்தையில் அனுர அரசு!





வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் எதிர்ப்பினை தாண்டி காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது உள்ளுர் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விசாரணைகளிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் பதிவு செய்யப்படடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மையை கண்டறிந்து, அவர்களது உறவினர்களுக்கு உரிய பதிலை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பதிவு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


No comments