கைவிடப்பட்ட தூபியில் அஞ்சலி!



பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையினரின்  நினைவிடத்தில்,  இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் இன்று (15) அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதரகத்தின் சாய் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், இந்தியத் தூதரக அதிகாரிகள் பங்கேற்று நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிப்படை மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது உயிரிழந்த இந்திய இராணுவத்தினரை நினைவுகூரும் வகையில், பலாலி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அமைதிப்படையின் வடக்கு மாகாண நடவடிக்கைகளின்போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில், உயிரிழந்தோரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 

No comments