காணாமல் போன நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் தொடர்பில் உண்மையை கோரி அல்லைப்பிட்டியில் பேரணி

அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவு நினைவேந்தல் பேரணியும்

திருப்பலியும் இன்று வியாழக்கிழமை (20) யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் இடம்பெற்றது.

அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் பவனி ஆரம்பித்து புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை சென்றடைந்து நினைவுரைகள் இடம்பெற்றதுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்பணி ஜிம் பிரவுண் அடிகளாரின் காணாமலாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த நினைவு நடைபேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், நினைவு நடைபேரணியில் பங்கேற்றவர்கள், உண்மை வெளிப்படுத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த நடைபவனியில் அருட்தந்தையர்கள், மதகுருமார்கள், அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் தனது உதவியாளருடன் 2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார்.


No comments