பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி - குழப்பமடைந்த காணி உரிமையாளர்கள் ; சபா மண்டபத்திற்குள் அழைக்கப்பட்ட பொலிஸார்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. 

விமான நிலையத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு காணிகளுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் , நடைபெற்றது. 

பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் , மாவட்ட செயலர் ம,பிரதீபனும் கலந்து கொண்டிருந்தார் 

இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கு சத்திய கடதாசியில் கையொப்பம் இட வேண்டும் என கோரியதை அடுத்து, சத்திய கடதாசியில் இழப்பீட்டு தொகையோ , காணியின் விபரமோ , எதுவும் இல்லாமல் , சத்திய கடதாசி தெளிவற்று காணப்படுவதால் , சத்திய கடதாசியில் கையெழுத்து வைக்க முடியாது என காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர் 

அதனை அடுத்து அதிகாரிகளுக்கும் , காணி உரிமையாளர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து , மண்டபத்திற்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்

அதனை அடுத்த பெருமளவான காணி உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.





No comments