மண்டைதீவு படுகொலை - 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு , மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து , படுகொலை செய்யப்பட்டவர்களில் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.









Post a Comment