கிளிநொச்சியில் கார் - புகையிரத விபத்து ; பெண் உயிரிழப்பு ; இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் , புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் , காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் , யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக வீதியில் அமைத்துள்ள புகையிரத கடவையில் , கார் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது
அதில் காரில் பயணித்தவர்களில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Post a Comment